Tuesday, September 20, 2016

தத்துவமும் அரசனும்





அன்புள்ள ஜெமோ

வெண்முரசின் சொல்வளர்காடு ஒரு முக்கியமான நூல். குறிப்பாக யோகநிலையங்களிலே பயில்பவர்களுக்கு. யோகநிலையங்களில் தத்துவம் சொல்லிக்கொடுக்கப்படும். அதைச்சார்ந்து யோகம் அமையாது. தத்துவத்தை யோகமாக ஆக்கிக்கொள்வதற்கான பல படிநிலைகளை வெண்முரசிலே கண்டாலும் சொல்வளர்காடுதான் அதற்கு உச்சமென நினைக்கிறேன்

சொல்வளர்காட்டிலே உச்சகட்ட தத்துவவிவாதங்களெல்லாம் வருகின்றன. ஆனால் அதிலிருந்து தர்மன் சென்றது அடுக்களைக்கு. அங்கிருந்து மெய்ஞானத்துக்கு. ஓர் அரசன் அறியவேண்டியது அதைத்தான். உயர்தத்துவமோ ஆன்மாவோ அல்ல. அடுக்களையும் பசியும்தான்

இதை எந்த ஆட்சியாளனுக்கும் சொல்லவேண்டும். பசியை விராடரூபனாக அவன் அறிந்துகொண்டால் அவன் சக்கரவர்த்தி. அவ்வளவுதான். வேறு ஞானங்கள் எல்லாம் இந்த முதன்மையானஞானத்துக்கு உதவவேண்டும், அவ்வளவுதான்

ஆர்.விஜயகுமார்