Sunday, September 11, 2016

சமையலும் ஞானமும்



ஜெ

சொல்லாவிட்டாலும் பலவகையான ஒற்றுமைகளை அளிக்கிறது வேதாந்தப்பேச்சும் சமையலறையும். அதைத்தான் இந்த அத்தியாயங்களிலே வாசித்துக்கொண்டே இருந்தேன். இரண்டுமே பலவகையான பொருட்களைப்போட்டு கலந்து ஒரு நுண்மையை அதாவது ருசியை அடைவதுதான் இல்லையா?



அந்த களேபரமும் சத்தமும் எல்லாம் வேதாந்தச்சர்ச்சைகளில் இருந்துகொண்டே இருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதெல்லாம் அடங்கி அமைதியை அளிக்கிறது. அதன்பிறகே உண்மை திரண்டுவருகிறது. சமைப்பவற்றை சாப்பிடாமலிருக்கும் நிலை வருபோதுதான் சமையல் விளங்குகிறது. அதன்பின்னர்தான் உண்மையும் துலங்குகிறது

ராஜசேகர்