Thursday, September 15, 2016

நிகழ்காலத்துக்கு

அன்புள்ள ஜெயமோகன்,
  




    நீண்ட காலத்துக்குப் பின் வெண்முரசின் நிகழ்காலத்துக்கு வந்து விட்டேன்.ஒரு வருடத்துக்கு மேல் ஆகியிருக்கும்.முதற்கனல் தொடங்கி.இடையில் தங்களின் ஏராள கட்டுரைகள்,சிறு கதைகள்,நூல்கள்.
பிற ஆசிரியர்களின் நூல்கள்.மேலும் நான் மிக விரைவாக வாசிக்கும் வாசகன் அல்ல.தங்களின் பிறபிரம்மாண்ட நாவல்களை நெருங்கும் துணிவு மெல்ல மெல்ல வருகிறது.இனி வெண்முரசு அளவுசாப்பாடு போல தினம் ஒரு அத்தியாயம் மட்டுமே கிடைக்கும்.நன்றி.
ஜெ.சாந்தமூர்த்தி,
மன்னார்குடி.
அன்புள்ள சாந்தமூர்த்தி அவர்களுக்கு
வெண்முரசு போன்ற பெரிய நாவல்களை வாசிப்பதில் இருநிலைகள் உள்ளன. அத்தியயாங்களாக வாசிக்கையில் நாம் கூர்ந்து தனித்தனியாக வாசிக்கிறோம். பின்னர் அவற்றை ஒருங்கிணைக்கிறோம். ஒவ்வொரு அத்தியயாத்தையும் தனியாக யோசிக்க அவகாசம் அமைகிறது
ஆனால் ஒட்டுமொத்தமாக வாசிக்கையில் மூழ்கியமர்ந்திருக்கும் அனுபவம் வாய்க்கிறது. அது ஒரு நிகர்வாழ்க்கை. இரண்டையும் அடைய தனியத்தியாயங்களாக வாசித்தபின் புத்தகத்தை வாசிப்பதே ஒரே வழி

ஜெ