Wednesday, September 21, 2016

தத்துவம் நிறைதல்






ஜெ

சொல்வளர்காடு முடிந்துவிட்டது. வழக்கமாக வெண்முரசின் நாவல்கள் முடிந்தபிறகு வரும் சோர்வும் தனிமையும் வரவில்லை. மாறாக இதில் தர்மனின் எழிச்சி ஒரு பெரிய நிறைவைத்தான் அளித்தது.

சொல்வளர்காட்டின் கதைப்போக்கு இரண்டு  பாதைகளாகச் சென்றது. ஒன்று முன்னரே இருந்த கதையின் தொடர்ச்சி. இன்னொன்று இந்நாவலில் மட்டுமே வெளிவந்த தத்துவமலர்ச்சியின் கதை. இரண்டையும் இணைக்கவேண்டியிருந்தது

முதலில் இது தத்துவம் மட்டுமாக இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆனால் அப்படி இருந்திருக்கமுடியாது என்று தர்மனின் எழுச்சி காட்டியது. அதற்கு ஒரு தொடர்ச்சி இருக்கிறது

தர்மன் காட்டுக்கு வரும் மனநிலை மிகுந்த தன்னிரக்கவும் கசப்பும் கொண்டதாகவே இருந்தது. அதிலிருந்து அவர் மெல்லமெல்ல விடுபடுவது தத்துவம் வழியாகவே

அந்தத் தத்துவத்தின் உச்சியில் அவர் அனலாக வெளிப்படுகிறார். இனி அவருக்குச் சஞ்சலங்கள் கிடையாது


சாரதா