Wednesday, September 7, 2016

அவதாரபுருஷனின் துயரம்





ஓர் உறவு முறியும்போது ஏற்படும் வலிக்கு அவதாரபுருஷன்கள்கூட விதிவிலக்கில்லை. பலராமருக்கும் கிருஷ்ணனுக்குமான உறவு எல்லா நூல்களிலும் ஒருமாதிரி மழுப்பி மழுப்பித்தான் சொல்லப்பட்டிருக்கும். சில நூல்களில் பலராமரை கிருஷ்ணனின் முதல் எதிரி என்றே காட்டியிருப்பார்கள். இந்த அத்தியாயத்தில் அவருடைய அந்தப்பிரிவின் மூர்க்கம் வலிதந்தது. என்ன செய்தாலும் அது ஒட்டாது என்பது தெரியும்போது பெரிய துக்கம் வந்தது. அவர் மௌனமாக நிராகரித்துச்செல்வதில் இருக்கும் அந்த தீவிரத்தை நாம் வாழ்க்கையிலே பலமுறை பாத்திருப்போம்

ஆனாலும் கிருஷ்ணன் அது சரியாகிவிடுமா என்று பரிதாபமாகக் கேட்பதும் சரியாகவே ஆகாது என்று கறாராக தர்மன் சொல்வதும் ஆச்சரியமான இடம். அது கிருஷ்ணனுக்கே தெரியும். ஆனாலும் கேட்பது ஒரு ஆறுதல் வார்த்தைக்காக. அதைச் சொல்லாமல் தவிர்க்கிறான் தருமன்.

சிவஞானம்