Friday, September 23, 2016

பீமனின் நாவல்


பீமனின் தருணங்கள் பிரயாகையிலும் முன்னரும் கையாளபட்டு விட்டது என்றே படுகிறது.
அப்படி பார்த்தால் பீமனுக்கு மழைபாடலும் ஒரு புத்தகம் தானே.

அர்ஜுனனுக்கு ஒரு கண்ணி முன்னமே வைத்து இருந்தார் நம் எழுத்தாளர். இந்திர விழா நடந்த வீதிக்கு சென்று திரும்பிய அர்ஜுனன் அடுத்த நாள் நீராட்டு அறையில் நடந்த பேச்சில் ஒரு புள்ளி வைத்து அதில் இருந்து அவன் இங்கு இருப்பதை பார்த்தால் இந்த காண்டீபம் புத்தகம் அர்ஜுனனின் விஸ்வரூபம். இதன் இடைவெளிகளில் அர்ஜுனனின் பங்கு ரொம்ப குறைவு. கிட்ட தட்ட காணவில்லை என்றே சொல்லலாம். மேலும் பீமன் எல்லாமாக ஆக இடம் கூட இருந்தது. எனக்கு, இது என்ன வஞ்சனை, என்றே கூட தோன்றியது. 

இந்த விஷயத்தை எழுத்தாளர் கொஞ்சமாக முன்னரே சொல்லி இருக்கின்றார். 
பீஷ்மர் கூட இன்னும் வளர்வார் ஆணால் சிகண்டி ஏற்கனவே உயர்ந்து உள்ளார்.

இப்படி பார்கையில் பீமன், நகுலன் இன்னும் கொஞ்சம் வளரலாம், பீமனின் தீவிர தருணங்கள் இன்னும் உள்ளன.
சஹதேவன் பெரிய இடத்தில் ஏற்கனவே இருக்கின்றான்.

பீமன் வந்தால் இனி பலராமர் போல.. அவ்வபோது வந்து புகுந்து பந்தாடி விட்டு நல்ல ஏழு வகை காய்கள் போட்ட அவியல் செய்ய கிளம்பி விடுவான் என்று எண்ணுகின்றேன்.

அதல பாதாளத்தில் இருக்கும் தருமனுக்கு ஒரு விராட உருவம் இருக்கின்றது.. 
யக்ஷ பிரஸ்னமாக இருக்கலாம் என்பது என் யூகம். அதற்க்கு பின்னும் அவனுக்கான வளர கூடிய இடம் நிறைய உண்டு.
தருமனிடம் இருந்து பெறவே நிறைய உள்ளது.
பல சமயங்களில் எனக்கு பாரதம் அவனுக்கு மட்டுமேயான, அவனை சொல்லவே என்று தோன்றுவதுண்டு. 


நன்றி
வெ. ராகவ்