Sunday, September 4, 2016

நஞ்சு






ஜெ

இன்று வாசித்தபடியே வந்தபோது தந்தையரின் அனைத்து ஆற்றல்களையும் மைந்தர்களின் பூசல் இல்லாமலாக்கிவிடுகிறது. பெண்களைப்போல அவர்கள் ஏங்கி அழும்படி ஆக்குகிறது அது.  என்னும் வரி கலங்கச்செய்துவிட்டது. ஒருவர் கிருஷ்ணனின் இந்நிலையை காந்தியுடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார். ஆனால் எல்லா ஊர்களிலுமே இது நடந்திருக்கிறது. பெரிய தீர்க்கதரிசிகள் காலத்திலேயே உட்பூசல்கள் தொடங்கி அவர்களின் காலம் முடிந்ததுமே மூர்க்கமான பிளவுகளாக ஆகும். என் அப்பா அடிக்கடிச் சொல்வார், ராமானுஜர் காலத்திலேயே தென்கலை வடகலை பூசல் ஆரம்பித்திருக்கும். பின்னர்தான் அது வெடித்திருக்கும் என்று. இதெல்லாம் உண்மையில் மனிதர்களின் இயல்புகள். நாம் எதுவுமே செய்யமுடியாது. நாம் நமக்கு அமுதத்துடன் வந்த பெரியவர்களுக்கு நஞ்சைத்தான் அளிக்கிறோம்

கிருஷ்ணஸ்வாமி