Saturday, September 17, 2016

அர்ஜுனன்



பொதுவாக அர்ஜுனன் சிறந்த வில்லாளன் என்று சொல்லப்பட்டாலும், மகாபாரதத்தை தொடர்ந்து வாசிக்கையில் பல சூழ்நிலைகளில் (பாஞ்சாலியின் சுயம்வரம்) மற்றும் பல போர்களில் மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரமாக இல்லாதவர்கள் முதல் கர்ணன் வரை பல வீரர்களிடம் தோல்வியடையும் சூழ்நிலையை எட்டியிருக்கின்றான் அல்லது தடுமாறி இருக்கின்றான். அப்போதெல்லாம் கிருஷ்ணன் இவன் இப்படிப்பட்டவன் இந்த இந்த வரங்களை வாங்கியிருக்கின்றார்ன் எனவே இவனை இப்படி கொல்ல வேண்டும். இந்த கருவி இப்படிப்பட்டது இதை இப்படி எதிர்கொள்ள வேண்டும் என ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றைப் பற்றிய ரகசியங்களை வெளிப்படுத்தி அர்ஜுனனை ஜெயிக்க வைக்க வேண்டிய அவசியம் என்ன...?

அர்ஜுனனால் முடியாதபோதும் அவனை ஜெயிக்க வைக்கின்றார், எதிரிகளுக்கு தெரியாமலேயே அவர்களை கட்டுப்படுத்தி தோல்வியடையச்செய்கின்றார். இதில் தோற்றவன் தோற்றதாக எண்ணிக்கொள்கின்றான், அர்ஜுனன் தான் வென்றதாக் எண்ணிக்கொள்கின்றான். உண்மையில் மகாபாரதத்தைப் பொருத்தவரையில் கிருஷ்ணனின் நோக்கம்தான் என்ன?

பா.பூபதி