Tuesday, September 20, 2016

மானும் நிலமும்



மறுவினைக்கு நன்றி மதுசூதனன்.

உண்மையில் சங்கப்பாடல்களில் நான் கொஞ்சம் வீக். சங்கப்பாடல்கள் குறித்து நான் வாசித்த உருப்படியான நூல்கள் 'சங்கச்சித்திரங்கள்' மட்டும்தான் (வேண்டுமென்றால் காடு நாவலையும் சேர்த்துக்கொள்ளலாம்). எனவே நீங்கள் சுட்டிய ஓரேழுழவரின் புறநானூற்றுப்பாடலைப் புரிந்துகொள்ள அப்பாடல் வரிகளை கூகிளில் தேடினேன். ஜெயமோகனின் தளமே மீண்டும் வந்தது. அந்தப் பக்கத்தில் கண்ட‌ வரிகளை இங்கே பகிர்கிறேன்.

http://www.jeyamohan.in/8059#.V9uZi0kqOeU

//’தோலை திருப்பியது போல நீண்ட வெண்ணிற சதுப்பு நிலத்தில் வேடனால் துரத்தப்படும் மான்போல இருக்கிறேன். சுற்றத்தால் சூழப்பட்ட வாழ்க்கை ஓடித்தப்ப விடாமல் தடுக்கிறது’ இரு அழகிய உவமைகளால் ஆனது இக்கவிதை. சேற்றுநிலத்தை தோலை உரித்து திருப்பியதுபோல வெண்ணிறமானது என்று சொல்வதில் உள்ள யதார்த்தப் பிரக்ஞையானது சங்கப்பாடல்களுக்கே உரியதாகும். . புல்வாய் என்றால் புல்தின்னும் வாய்கொண்ட மான். சதுப்பில் ஓடித்தப்ப முடியடஹு. வேடனின் அம்புக்குப் பலியாகவேண்டியதுதான்

தடுப்பது எது? ஒக்கல் என்று வருகிறது. ஒக்கல் என்றால் சொந்தங்கள் என்று பொருள். ‘தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஐம்புலத்தார் ஓம்பல் தலை’ என்பது குறள். [ இறந்த மூதாதையர், கடவுள், விருந்தாளிகள், சுற்றத்தார், தான் ஐந்து பேரையும் பேணவேண்டியது இல்லறத்தான் கடமை] ஆனால் ஒக்கல் என்ற சொல்லுக்கு இடையில் ஏந்துவது என்றும் பொருள் உண்டு. ஒக்கல் ஏற்றுதல் என்றால் குழந்தையை இடுப்பில்வைத்துக்கொள்ளல். ஒக்கல்வாழ்க்கை என்பது இன்னும் நுண்மையான ஒரு அர்த்தமாக ஆகிறது.//

ஆம், அடிதிருப்பப்பட்ட தோல்போன்ற சதுப்புநிலம். ஓடித்தப்பமுடியாத மான். சுற்றத்தால் சூழப்பட்டதால் தப்பமுடியாமல் இருப்பதை தருமன் உணர சரியான இடம். அழகான வாசிப்பு! நன்றி.

இதை (இதுவரை அனுப்பவில்லை என்றால்) ஜெவின் மின்னஞ்சலுக்கும் அனுப்பிவிடுங்கள். இது வெண்முரசு விவாதத்தளத்தில் வெளியாகவேண்டும்...

திருமூலநாதன்