Saturday, September 3, 2016

பெண்களின் அரசியல்






ஜெ

இன்றைய அத்தியாயத்தை வாசித்துவிட்டு முந்தைய அத்தியாயத்தை வாசித்தபோது ஒரு பெரிய திறப்பு போல இருந்தது. இன்றைய அத்தியாயத்தில் யாதவக்குலங்கள் பூசலில் இறங்குகிறார்கள். யாதவர்களின் அழிவுக்கு அதுவே அடிப்படையாக ஆகிறது. ஆனால் முந்தைய அத்தியாயத்தில் அதற்குக்காரணமாக இருப்பது பெண்களின் சில்லறை அகங்காரப்போட்டி.

சத்யபாமா அகங்காரமும் தாழ்வுணர்ச்சியும் சரியாகக்கலந்த ஒருபெண்ணாகவே காட்டப்பட்டிருக்கிறாள். எல்லா கதைகளிலுமே சத்யபாமாவுக்கு கிருஷ்ணன் மீது அதிகாரம் கலந்த உறவுதான் இருக்கிறது. அவர் கிருஷ்ணனை சீண்டி அவமானம் செய்கிறார். அதேபோல கிருஷ்ணனும் அவளுக்கு சமாதானமாகவே எப்போதும் இருக்கிறார்.

 இந்தப்பலவீனம் அவளால் பயன்படுத்தப்படுகிறது. அதுதான் கடைசியில் இத்தனை பிரச்சினைகளுக்கும் கராணம் அந்த இடத்தில் அவர் பேசுவதும் புலம்புவதும் பெண்களின் எல்லா ஜாலாக்குகளையும் காட்டுவதாக நுட்பமாக அமைந்துள்ளது ஒரு அரசியலின் எல்லா விரிவுகளையும் கூடவே அதன் எல்லா நுணுக்கங்களையும் பார்ப்பதுபோல உள்ளது

சத்யா.