Tuesday, September 6, 2016

கண்ணனின் வாள்



கூர்வாளை எடுத்து விளையாடும் மைந்தனை கல்கொண்டு அடிப்பது போல என்று, யாதவ குலங்களை   சேர்க்க மீண்டும் அவர்கள் பிரியாதிருக்க இளைய யாதவர் இந்த கொலையாட்டை நிகழ்த்தியதை சொல்கிறார். மைந்தனே என்றாலும் ஏந்தியது கொலைவாளல்லவா?

 .இத்தனை கொலையாட்டின் பின்னும் கண்ணனின் மனம் கலங்கச்செய்கிறது மூத்த  யாதவரின் உளத்திரிபு .

எப்போதும் அக்கரைப்பச்சை நாடும் கால்நடைகளால் சூழப்பட்டவர்கள் யாதவர்.” இதைவிட கன்றுமேய்த்து வாழும் யாதவர்களின் பூசலுக்கான காரணத்தை வேறு எப்படியும் அழகாக சொல்லவே முடியாது

தருமர் கண்ணனிடம் இனி என்ன நடக்கும் என கேட்ட காலம் போக, இன்ரு  இளைய யாதவன் தர்மரிடம் மூத்தவர் சரியாக வாய்ப்புள்ளதா என கேட்கிறார்.


தலையை சரித்து குழல்கற்றைகளை அள்ளிக்கட்டி பீலி நிறுத்தியபின்- 
இது மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. அதுவ்ம் அந்த பீலி      “ செருகியபின் அல்ல” , ”நிறுத்தியபின்”. இளைய யாதவன் நடந்து செல்லும் அந்த சித்திரத்திலும் பீலி நின்றிருக்கிறது

லோகமாதேவி