[பெரிதாக்க படம் மீது சுட்டவும்]
அன்புள்ள ஜெமோ
வெண்முரசில் பூரிசிரவஸின் கதாபாத்திரம் மட்டும் மிகவும் மாறுபட்டிருக்கிறது. எனக்கு அது ஜுராசிக் பார்க் 3 படத்தை ஞாபகப்படுத்தியது. அதிலே மிகப்பெரிய டினோசர்களெல்லாம் ஓடும்போது கால்களுக்கு நடுவே குட்டிக்குட்டி டினோசர்களெல்லாம் ஓடிக்கொண்டிருக்கும். அதேபோல பீமன் அர்ஜுனன் துரியன் கிருஷ்ணன் நடுவே இவன் ஓடிக்கொண்டிருக்கிறான்.
அந்தக்காலத்திலே மாவீரர்கள் இல்லாதவர்கள் இருக்கவில்லையா என்ற கேள்விக்கு இவன் விடை. இவன் மிகவும் சென்ஸிடிவ் ஆனவன். மிகவும் சாமானியன். ஆனால் இவனும் அந்த வரலாற்றுக்குள்ளேதான் இருக்கிறான்
இவனை ஏன் கொண்டுவந்தீர்கள் என்று புரிகிறது. இவனுடைய பார்வை வழியாகத்தான் பெரிய பெரிய கதாபாத்திரங்களின் பெரிய பெரிய வாழ்க்கையைக் காட்டமுடிகிறது. பூரிசிரவஸ் மாதிரி பெண்களை பெரிய ஆசையுடன் கூர்ந்து பார்க்கும் ஒருவனின் பார்வை வழியாகத்தான் பல பெண் கதாபாத்திரங்களைக் காட்டமுடிகிறது.
மகாபாரதத்திலே இதுவரை வந்த கதாபாத்திரங்களிலே எனக்கு பானுமதிமீது மிகுந்த மதிப்பும் ப்ரியமும் ஏற்பட்டது
ராஜாராம்