Sunday, May 10, 2015

அந்த முந்நூறு பேர்

அன்புடன் ஜெயமோகன் அவர்களுக்கு,தங்களின் அந்த முன்னூறு பேர் கடிதம் வாசித்தேன்.இது நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம்.கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தங்களின் தளத்தில் வென்முரசு முதற்கொண்டு தங்களின் அணைத்து கட்டுரைகள் மற்றும் கடிதங்களை வாசித்து வருகிறேன்.வென்முரசின் அணைத்து நாவலையும் செம்பதிப்பாக பெற்றுள்ளேன்.

ஆனால் இணையத்தில் விவாதங்கள் எழுதும் அளவிற்கு கணனி அறிவு இல்லை என்னைப்போன்றவர்களுக்கு தங்களின் முன்னூறு பேரை இனைக்கும் ஆசை நடந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்.தாங்கள் அதுபோல் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தால் என்னைபோல் உள்ளவர்கள் கண்டிப்பாக வருவார்கள்.அன்புடன்,

வரதராஜன்  நாமக்கல்.

                                               (இக்கடிதம் வேறுருவர் மூலம் தட்டச்சு செய்து அனுப்பியுள்லேன்)

அன்புள்ள வரதராஜன்

நீங்கள் சொல்வது ஓர் நல்ல எண்ணம். ஆனால் இவ்வாசகர்கள் பல நாடுகளில் பல ஊர்களிலாகப் பிரிந்து கிடக்கிறார்கள். இவர்களை ஓரிடத்தில் ஒருங்கிணைப்பது எளிதல்ல

முடிந்தவரை சிலரை கூட்டி பேசப்பார்க்கலாம். முயல்கிறேன்

ஜெ