Friday, May 15, 2015

கனவின் வழி



ஜெ,

ஒன்றரை வருடங்களில் மகாபாரதக் கதை அதிகம் முன்னால் செல்லவில்லை. ஆதிபர்வம் மட்டும்தான் தாண்டியிருக்கும் என நினைக்கிறேன். அதிலேகூட யயாதி, நகுஷன், நளன் மாதிரி பல பெரியகதைகளை இன்னும்கூடச் சொல்லவில்லை. ஆனால் வெண்முரசு அவ்வளவு ஓடிக்கடந்துவந்திருக்கிறது. ஆச்சரியமான விஷயம்தான் இது

வெண்முரசை வாசிக்க ஆரம்பித்தது மழைப்பாடலை நீங்கள் முடித்தபிறகுதான். நான் பலநாட்களி அதுக்குள்ளேயே இருந்து வாசித்துக்கொண்டிருந்தேன். வாசிக்க வாசிக்க இந்தளவுக்கு விரியும் எதையுமே நான் வாசித்ததில்லை. இதிலுள்ள கனவை வாசித்தபின்னாடி எதுவுமே முக்கியமில்லை, நவீன இலக்கியம் என்றால் ஒரு அரசியல் மட்டும்தான் என்று தோன்றிவிட்டது

கனவு இல்லாவிட்டால் என்ன இலக்கியம். நான் இந்தக்கனவிலே இருந்து வெளியே வரக்கூடாது என்பதற்காகவே மேற்கொண்டு எதையும் வாசிக்காமல் காண்டவம் வரட்டும் என்று காத்திருக்கிறேன்

அரசு ராஜசேகர்