Tuesday, May 12, 2015

எழுதுவதும் வாசிப்பதுமான ஒன்று


  "அந்த முந்நூறு பேர்" படித்தது ஒரு நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. 
ஆதர்சமிடமிருந்து ஒரு அரவணைப்பு...தழுவி உரையாடியது போலொரு உணர்வு.
இறுதி வார்த்தைகள் வலித்தன...

என்னைப் பொறுத்தவரை, வாசிக்காதவர்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.
அது தமிழகத்தின் சாபக்கேடு.
 இணையத்தில் வாசித்துவிட்டு, புத்தகம் வாங்காமலிருக்கிறார்களா!
புத்தகம் வாங்காமலிருப்பது, ஒரு வகையில் உதாசினமே.
எத்தனை வருட உழைப்பு..எழுத்தின் உச்சம்..அதனை எந்த குற்றவுணர்வுமின்றி படித்துவிட்டு செல்லுதல் என்பது எவ்வாறு முடிகிறது!!
இந்த வாசிப்பு கொடுக்கும் அனுபவத்திற்க்கு, என்ன கொடுத்து ஈடு செய்ய முடியும். 
புத்தகத்திற்கான விலையென்பது ஓர் எளிய காணிக்கையே.அதைக்கூட அளிக்கத் தயங்குவதா!!

உலகின் மிகப்பெரிய இலக்கியம் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் நான் வாழ்ந்தேன்...ஒரு நாள் தவறாமல் படித்தேன்....அந்த மகத்தான படைப்பாளிக்கு கடிதங்கள் எழுதினேன் என்பது எத்தனை பெரிய அங்கீகாரம்...மீளமீள சொல்லிக்கொள்ள ஓர் வாய்ப்பு.

மகேஷ்
(காங்கோ)
 
அன்புள்ள மகேஷ்

வெண்முரசு அதன் வாசகர்களையும் என்னையும் ஒரு தனியுலகில் மிக அண்மையில் ஒன்றாக நிறுத்துகிறது. அது பெரிய நிறைவை அளிக்கிறது. ஆனால் சேகரின் மரணம் போன்ற சமயங்களில் அதுவே துயரத்தைப் பெருக்கிவிடுகிறது

ஜெ