அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
காண்டவம்
குறித்து. காண்டவம் எழுதிய வரை அற்புதமாக இருந்தது. அதன் தொல்கதைகள்,
பிரமிப்பூட்டும் நிலச்சித்திரங்கள், உவமைகள் என அனைத்தும் அதன் அழகின்
உச்சியில் இருந்தது.
அது தற்காலிகமாக நின்றது வருத்தத்தை அளித்தாலும் தங்களை புரிந்து கொண்ட வாசகர்கள் தாங்கள் எழுதும் முறையை அறிவார்கள்.
ஆனால்
என்றோ, இவ்வளவு அழகாக அமைக்கப்பட்ட ஒரு கட்டுமானம் அதன் முழு அழகோடு
தங்கள் எழுத்தில் படர்ந்து பந்தளித்து ஒரு காண்டவ வனமாக எழுந்து நிற்கும்
என்றே நம்புகிறேன். இறைவன் அருளட்டும்.
தினந்தோறும்
வலையேற்றப்பட வேண்டும் என தாங்களே வகுத்துக்கொண்ட நிர்ப்பந்தம் கண்டிப்பாக
ஒரு மிகப்பெரிய சவால். முகஸ்துதி இல்லை தங்களால் மட்டுமே ஆகக்கூடிய ஒரு
விஷயம். நல்ல சமயம் எடுத்துக்கொண்டு எழுதுங்கள். காத்திருக்கிறோம்.
அன்புடன்,
கணேஷ்
பஹ்ரைன்.