Saturday, May 9, 2015

பிரதமை




“அவர்கள் இன்னும் சிலநாட்களில் தட்சிணகுருவுக்கே செல்லப்போகிறார்கள். பாண்டவர்களும் அவர்களின் அரசிகளும். அங்கே அவர்கள் தங்குவதற்கான பாடிவீடுகளை கட்டத்தொடங்கிவிட்டனர். வளர்பிறை முதல்நாளில் இந்திரப்பிரஸ்தத்திற்கான கால்கோள்விழா என்றார்கள். பாஞ்சாலத்திலிருந்து சிற்பிகள் வருகிறார்கள்.”

வளர்பிறை முதல்நாள் அதாவது பிரதமை. பொதுவாக நம்மூரில் பிரதமை, அஷ்டமி, நவமியில் ஒரு நல்ல காரியத்தைத் துவங்கக்கூடாதுன்னு சொல்வார்கள். ஆனால் வெண்முரசு மாற்றிச் சொல்கிறது. எப்படி?
விந்தைமனிதன் ராஜாராமன்

அன்புள்ள ராஜாராமன்,
இதையும் ஒருவர் கவனிப்பார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அது மிகக்கவனமாகச் செய்யப்பட்ட ஒரு   குறிப்பு

பிரமையன்று ஆலயங்கள், இல்லங்கள் கால்கோள் செய்யக்கூடாது. மங்கலச்செயல்கள் செய்யக்கூடாது. மங்கலவேள்விகள் தொடங்கக்கூடாது. ஆனால் பூதயாகங்கள், போர்களுக்கு நாள்குறிக்கலாம்.கோட்டைகள், காவலரண்கள் பாடிவீடுகள் கட்டலாம். தமோதேவதைகளுக்குரிய ஆலயங்கள் அமைக்கலாம்.

இந்திரப்பிரஸ்தம் எந்த மனநிலையில் உருவாக்கப்பட்டது என்பதை அது குறிக்கிறது

ஜெ