Wednesday, May 6, 2015

தலைமுறைகள்



ஜெ,

வெண்முகில்நகரம் முடிந்தபோது ஒரு பெரிய மனநெகிழ்வும் கூடவே ஒரு படபடப்பும் வந்தது .எல்லா கதாபாத்திரங்களும் முழுமையை அடைந்துவிட்டன. எல்லாருடைய முகமும் தெளிவாகிவிட்டிருக்கின்றன. அதுதான் மனநிறைவு. ஆனால் எல்லாம் போரைநோக்கிச்செல்கின்றன என்பது பதற்றம். பூரிசிரவஸ் கூட மேடைமேல் ஏறி நின்று அஸ்தினபுரியிலே காத்து நிற்கும் அந்த கைவிடுபடைகளைத்தான் பார்க்கிறான்.

அந்தக் கருவிகளை விதுரன் சின்னப்பையனாகப் பார்த்த ஞாபகம் வருகிறது. அப்போதே அவை ஒரு போருக்காகக் காத்து நின்றிருக்கின்றன. போர் இரண்டு தலைமுறைக்காலமாக ஒத்திப்போடப்பட்டிருக்கிறது.

வெண்முரசின் சிறப்பம்சமே இப்படி பலதலைமுறைக்கால வாழ்க்கையில் நாமும் வாழமுடிவதுதான். தலைமுறைதலைமுறையாக பழிகளும் கோபங்களும் கடந்துசெல்கின்றன.

ஜெயராஜ்