அன்புள்ள ஜெமோ
வெண்முகில்நகரம்
முடியும்போது நெகிழ்ச்சியும் கண்ணீருமகா முடிந்தது. ஆனால் நான் ஒரு விஷயத்தை நினைத்துக்கொண்டேன்.
சகுனி புரானகங்கையிலே கண்டுபிடித்த அந்தப்பெரிய கதாயுதம். அனுமனுக்குரியது அது. அது
நகரத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. நீங்களும் அதைப்பற்றி சொல்லாமல் விட்டு மறக்கவைத்துவிட்டீர்கள்.
அது அங்கேதான் இருக்கிறது . காத்திருக்கிறது. அது இருக்கிற வரைக்கும் எதுவும் முடிந்துவிட்டது
என்று சொல்லிவிடமுடியாது இல்லையா?
பிரபா