அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
மலரில் இருந்து
மணத்திற்கு கட்டுரைப்படித்தேன். முன்னமே இந்த கடிதத்தைப்படித்து கந்தர்
அநுபூதியின் உருவாய் அருவாய் பாடலை மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டேன்.
அந்த பாடலின் எதிர் எதிர் திசைகளின் பெரும் வெளியை திறந்து காட்டி
வைத்தீர்கள். சொல்லியப்பாட்டின் பொருள் உணர்ந்து சொல்வார் செல்வர்
சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ் என்பதன் பொருள் அறியமுடிந்தது. இன்று
இந்த கட்டுரையை படிக்கும்போது. காண்டவம்-அன்னை கிரிஜையின் தவம் கனிந்து
வரும் காட்சிப்படிமம் பொருள் நிறைந்ததாகியது. நன்றி.
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்