ஜெ
மெய்ப்பெழுந்து மென்மை அழிந்தது என் உடல்.
கைக்குழியில் எரிந்தது ஈரக்கனல்.
கைதழுவும் மெல்லுடலில் காதல் கொண்டாய்.
உன் கண் தொடாத இருளில் நீந்துகின்றாய்.
என்ற வரிகளை வாசித்தால் பெண்ணின் மனசின் ஆழம் அப்படியே இருக்கிறது. என் உடலைத் தொடுகிறாய் மன இருளில் நீ அறியாமலே வந்து நீந்துகிறாய் என்று உணராதவளே இருக்கமுடியாது
மலர்கனத்து வளைந்த மரக்கொம்பில் இரு மணிப்புறாக்கள்.
அஞ்சி அலகுபுதைத்தவை. அணித்தூவல் குவைகள்.
அவன் கை நீட்டக்கண்டு அதிர்ந்து எழுந்தமைந்தன
அப்படி மனசைத் தொட்டுச் சொல்லி உடனே உடலைப்பற்றிய ஒரு நுட்பம் வந்துவிடுகிறது
இரண்டு எல்லைகளையும் இப்படிச் சொல்லிய ஒரு புதிய கவிதையை நான் தமிழிலே வாசித்ததில்லை. ஆண்டாள் எழுதிய மொழியிலேதான் இதைஎல்லாம் சொல்லமுடியும் என்று நினைக்கிறேன்
செல்வி