Thursday, May 7, 2015

சொற்கள்

ஜெ,
 
கீழ்க்கண்ட சொற்களை விளக்கக் கொருகிறேன்
 
கார்த்திக்
 
உங்கள் வினாக்களுக்கான விடை,

அகப்படையல் -  தன் உள்ளத்தைப்படைப்பதுதான்

சொல்நிகரி - நிகரான சொல். கடல் என்பதற்கு ஆழி போல

பசுமீன் -  இணையத்தில் தேடிய போது ஒரு குறுந்தொகை பாட்டில் "பாணர் பசுமீன் சொரிந்த மண்டை போல" என்ற வரியை கண்டேன். "Fresh fish" என்பது இச்சொல்லால் குறிப்பிடப்படுகிறதா அல்லது உலர்மீனுக்கு எதிரான சொல்லா? ஆம், பச்சைமீன்

செங்கூனி - என்ன வகையான மீன் என்பது தெரியவில்லை.

கொள்நிதி - முதல், மூலதனம்- வசூலிக்கப்படும் செல்வம்
?
இயல்தகவு -  Possibility?. ஆம். நிகழ்தகவு என்பது பாஸிபிளிட்டி. தகவு என்பது தகைவது. இணைவது.

உதரபந்தனம் - இடுப்பில் கட்டும் கச்சை

இன்கடுநீர் - பழங்காலத்து பானம். கசப்புள்ள சுக்கு மிளகு திப்பிலியுடன் வெல்லம் சேர்க்கப்பட்டது. ஒருவகை சுக்குக்காப்பி

மீமானுடன் - நேராக Superhuman என்று கூறலாமா அல்லது மானுடர்கள் எவ்வாறு இருக்க/இருந்திருக்க வேண்டும் என்பதை காட்டுபவன் (Meta-human?) என்று கொள்ளலாமா? ஆம். அதிமானுடன்
 

தட்டகம் - ஒரு தெய்வத்தின் செல்வாக்குள்ள ஊர்களின் வட்டம்.
 
அரிமலர் - மஞ்சளரிசியும் மலரும் கலந்த கலவை
 
ஜெ
நன்றி