Monday, February 8, 2016

காட்சிவெளி





ஜெ

இந்திரப்பிரஸ்தத்தின் பேருருவக்காட்சியை வழக்கம்போல உவமைகள் வழியாக நுணுக்கமாகச் சொல்லிச் செல்கிறீர்கள். சீனவிசிறி மடிப்பை நீட்டியதுபோல படித்துறை. பட்டுத்துணியின் மடிப்புகல் போல வெண்பளிங்குப் படித்துறைகள். நாய்க்குடைக் காளான்கள் போல தூண்கள். வளையலிட்ட கைகல் போல் அவற்றிலே பூண்கள். வந்துகொண்டே இருக்கும் காட்சிகள் ஒரு மாய உலகுக்குள் சென்ற உணர்ச்சியை அளிக்கின்றன

இந்தகாட்சியனுபவம்தான் வெண்முரசின் பெரும் கொடை. நுட்பமான உணர்ச்சிகள், மொழி எல்லாம் இருந்தாலும் சின்னக்குழந்தையாக உள்லே சென்று சந்தோஷமாக வாழமுடிகிறது. ஒரே சமயம் ஒரு குழந்தைக்கதையாகவும் இருக்கிறது வெண்முரசு
 
ஜெயராமன்