Monday, February 8, 2016

நாகரீகம்






ஜெ

அர்ஜுனன் கண்ட நகரம் கட்டி எழுப்பப்படும் ஒன்று, கர்ணன் காண்பது மக்கள் நிறைந்து பொலிந்த ஒன்று . ஒன்று கற்பனை. இன்னொன்று உண்மை. இரண்டும் இணைந்து உருவாக்கும் ஒரு மனப்பிம்பம் மகத்தானதாக உள்ளது. ஒருநகரை நீங்கள் முழுமையாகச் சொல்வதில்லை. ஆங்காங்கே சொல்வீர்கள். சொல்வதற்குள் ஒரு பொருத்தம் இருக்கும். ஒட்டுமொத்தமாக நகரம் உருவாகிவ்ந்திருக்கும்

பழையகால இந்தியாவே பெருநகர்களால் ஆனது. கிராமங்கள் இங்கே அதிகம் வரவில்லை. எல்லா நாடுகளும் நகரநாடுகளாகவே இருக்கின்றன. அரசு கலை எல்லாமே நகரத்தைச்சேர்ந்தவை. ஆகவேதான் நாகரீகம் என்று சொன்னார்கள் போல

அழகர் ரத்தினசாமி