Monday, February 8, 2016

சொல்லப்படாதது





ஜெ

துரியன் தேவயானியின் மணிமுடியைக் கைவிடுவதாகச் சொல்லும் இடம் நுட்பமானது. அகங்கார அடையாளமாகிய ஒன்றை அவன் கைவிடுவதே அவன் அகங்காரத்தைக் கடந்துசெல்ல விரும்புகிறான் என்பதன் குறியீடாகத் தோன்றுகிறது. 

அதை அவன் சொல்லமுடியாமல் தவிப்பதும் கர்ணன் அதை உணர்ச்சிகரமாகக் கடந்துசெல்வதும் நுட்பமான இடங்கள். கர்ணனிடம் சொல்ல துரிக்கு முக்கியமான ஏதோ ஒன்று உள்ளது. அது வந்து வந்து செல்கிறது. நீங்கள் யாரென நான் அறிவேன் என அவன் சொல்லவருகிறான். துரியன் அதைச் சொல்லவிடாமல் கர்ணன் பார்த்துக்கொள்கிறான்

உணர்ச்சிகரமான நாடகத்தருணம். சொல்லியும் சொல்லாமலும் அதைக் கடந்துவிட்டீர்கள்

சாமிநாதன்