Monday, February 8, 2016

அறுவைசிகிழ்ச்சை



இன்றைய அத்தியாயத்தின் காளிந்தியைக் குறிக்கும் இந்த உவமை சற்று அன்னியமாகப் பட்டது - 'போழ்ந்து குழவியை எடுத்த அடிவயிற்று வடு'. இது வரை வெண்முரசில் இத்தகைய வடிவில் குழந்தை பிறத்தல் வரவில்லை. வெண்முரசின் காலத்தில் இத்தகையதோர் சிகிச்சை முறை இருந்ததாகவும் தெரியவில்லை. அப்படியிருக்க இந்த உவமை சற்று எதிர்காலத்தைச் சார்ந்தது போல் இருந்தது. இல்லை நான் எதையாவது தவற விட்டிருக்கிறேனா?

மகராஜன் அருணாச்சலம்
 
அன்புள்ள மகராஜன்

ஆதாரபூர்வமாக அறுவைசிகிழ்ச்சை முறை, அறுவைப்பேறு இருந்தது என்பதைச் சொல்லமுடியாது. ஆனால் மகாபாரதத்தில் அப்படிக் கற்பனைசெய்ய பல வாய்ப்புகள் உள்ளன. ஆகவே அதைச்சேர்த்தேன். மேற்கேகூட சீசர் அறுவைசிகிழ்ச்சை செய்து பிறந்தவர் என்று சொல்லப்படுவதுண்டு.

ஜெ