Saturday, February 6, 2016

கதைவெளிக்குள்







அன்புள்ள ஜெ

வெண்முரசு வாசிக்கையில் எழும் ஓர் உணர்வுண்டு, நாமும் அதற்குள் சென்று அந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தக்கதாபாத்திரங்களை எல்லாம் நமக்கு நன்றாகவே தெரியும் என்று. ஆகவேதான் சின்னச்சின்னக் கதாபாத்திரங்கள்கூட நன்றாக நினைவில் நிற்கின்றன. உதாரணமாக விப்ரர். அவரை நான் மீண்டும் பார்க்கையில் மிக நன்றாகத்தெரிந்தவராகவே உணர்ந்தேன். தெரியாதவராக இல்லை. அவ்வளவு தூரம் எல்லா கதாபாத்திரங்களும் உள்ளே இருக்கிறார்கள்

இதேபோலத்தான் வெண்முரசின் கதாபாத்திரங்களும் வெண்முரசுக்குள் இருக்கிறார்கள். அவர்களை வியாசனும் ஜெயமோகனும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய கதைவெளி. ஆனால் தீயால் ஆனது

சிவராமன்