Tuesday, February 2, 2016

நாகங்கள்






ஜெ,

வெண்முரசின் இன்றைய அத்தியாயத்தை [31-1-2016] பலமுறை வாசித்தேன். உணர்ச்சிகரமான கதை உற்சாகமான கதையாக மாறி அப்படியே சூட்சுமமான கதையாக உருவம் பெற்றிருக்கிறது

துரியோதனனுக்கும் எங்கோ பாஞ்சாலி மேல் காமம் கிடந்தது என்பதைச் சொல்லும் சில இடங்கள் முன்னாடி வந்திருக்கின்றன. அவள் முன் உருவம்பெருக்கி ராஜநாகமாக நின்றிருக்க அவன் முனைவது அதனால்தான்

அவனைக்கட்டுப்படுத்த இன்னொரு ராஜநாகமான கர்ணன் கூடவே போகலாம் என்கிறார் கணிகர். இன்னொரு ராஜநாகமான ஜயத்ரதனை அனுப்பலாம் என்கிறார் சிவதர்

இந்த சூட்சுமமான ஆடலுக்கு அந்தச் சதுரங்கவிளையாட்டு அற்புதமான குறியீடு. சதுரங்கத்தில் அதைத்தொடங்குவது அரிய கற்பனை

மனோகரன்