Friday, September 2, 2016

திரெளபதி

இன்றைய பகுதி எனக்கு வெண்முரசின் அனைத்துப்பாகங்களிலிலுமே வைத்து மிக மிக பிடித்தது. ஒரு பெண்னாக ஒவ்வொரு கணமும் நினைத்துக்கொண்டே இருப்பேனென்று நினைக்கிறேன்
திரெளபதி துகிலுரியப்பட்ட போது கண்ணன் வந்து நிறைய முடிவில்லா புடவைகள் அருளி அவளது மானம் காத்தான் என்றே காலம்காலமாக சொல்லப்பட்டும் நம்பப்பட்டும் வந்த நிலையில் அதை மிக அழகாக practicala ஆக இப்படித்தான் நடந்திருக்கும் என எல்லாருமே ஏற்றுக்கொள்ளும் படியே காட்டியிருந்தார். ஆயினும் ஏன் கண்னன் இன்னும் வந்து இவர்களை பார்க்கவில்லை எனும் கேள்வி இருந்துகொண்டே இருந்தது
அதற்கான விடை இன்று கிடைத்தது

திரெளபதி சினந்து கண்ணனைப்பற்றி கொஞ்சம் கிண்டலாக சொல்லிய” கூர்மதியர், சொல்வலர், களவீரர், காத்துநிற்பவர், கைவிடாதவர், தளர்ந்தமையாதவர்”  என்னும் அனைத்தயும் ஏற்றுக்கொண்டவன் ஆம் நான் வெல்லப்படமுடியாதவன் ஆயினும் ஊழினால் அல்ல என்கிறான் அது மிக சிறப்பானதாக இருக்கிறது

கூடவே அவள் வார்தைகளிளேயே அவளை மடக்க குலப்பெண்கள் இப்படி வஞ்சினம் உரைப்பதில்லை என்றதும் அவர் எதிர்பார்த்தபடியே  திரெளபதி கடும் சினத்தில் நான் குலப்பெண்மட்டும் அல்ல அரசி என்கிறாள். இதுதான் கண்னன் எதிர்பார்த்தது.திரெளபதியை வேறு எப்படியும் கட்டுக்குள் கொண்டுவரமுடியாது அவள் போக்கிலேயே சென்று அவளை மடக்கியது மிக அருமை

வென்று வருகைய்லும் மணிமுடி சூடிக்கொள்கையிலும் அரசி ஆனால் அவை முன் சிறுமைப்பட்டபோது மட்டும் எப்படி பெண்ணாக மட்டுமே ஆகமுடியும் என்பது எல்ல பெண்களுமே தெரிந்துகொள்ளவேண்டும்

பெண்கள் அவர்கள் விரும்புகையில் மட்டும் பெண்ணாக அறியப்படமுடியுமா என்ன?
அதன் பிறகும் அவள் வஞ்சினம் அவளின் 5 கணவன்களுக்குமட்டுமல்ல தானும் அதற்கு கட்டுப்பட்டவன் என்கிறான். அவன் வேறு எப்படி சொல்ல முடியும் அவர்தான்  “களவீரர், காத்துநிற்பவர், கைவிடாதவராயிற்றே?

உன் விழிநீரும் சிந்தும் உன் வயிற்றுக்குருதியும் வீழும் என்கிறான். அரசியல் தோற்றது என்னும் வார்த்தையும் அழகு

 அங்கு தோற்றது அரசியல் தான் அது ஒரு political game   சூதில் தோற்றது தர்மனானாலும் துரியன் தோற்கடித்தது திரெள்பதியை 5 பேரயௌம் பகடைகளாக்கி விளையாடிய்து அவளே.

தருமனையும் ஏன் அவளிடம் பேசும் போது உடன் இருக்கசொல்லி இருந்தான் கண்ணன் என தெரியவில்லை ஆனால் தர்மரின் குற்றவுணர்வு இனி மட்டுப்படும். இது அவரால் மட்டும் ஏற்பட்ட விளைவல்ல என அவ்ரும் தெரிந்துகொள்ளட்டுமென்றே   கூட இருக்கும் படி சொல்லியிருப்பார்.

தெய்வங்களுக்கு அனைவரும் எளிய சிற்றுயிர்கள் மட்டுமே. வென்றவரும் தோற்றவரும் வெறும் குருதிதான்.

 இந்த வரிகளில் முழு மகாபாரதமுமே அடங்கி இருக்கிறது

லோகமாதேவி