Tuesday, April 10, 2018

அறிவு விடுதலையா 2



ஜெ

அறிவு விடுதலையா என்று ஒருவர் கேட்டிருந்தார். அந்த சுலோகம் சிக்கலான எண்னங்களை எழுப்புவதுதான். குறையாக அறியப்பட்டவையே தீங்கிழைப்பவை. அவை அறிவென கொள்ளப்படுவதில்லை என அடுத்த வரி எழுகிறது. அறிவு வேறு அறிதல் வேறு அல்ல. அறிதல்தான் அறிவு. அறிதல்தான் விடுதலை. ஒருவர் அறிவதை நிறுத்திக்கொண்டு அதுவரையிலான அறிவை சிறையாக ஆக்கிக்கொள்ளமுடியும். அறிதல் தொடர்ந்து நிகழும்வரை அவர் சிறைப்படமாட்டார். அறிவதற்கான ஆவல் மேலும் மேலும் வழிகாட்டி விடுதலநோக்கித்தான் கொண்டுசெல்லும். அறிதலைத்தான் இங்கே அறிவு என்கிறார் கண்ணன். அறிவு எனக் கருதப்படும் செய்திகளையும், நம்பிக்கைகளையும் அல்ல

செம்பியன்