Thursday, April 12, 2018

இமைக்கணம் என்பது...




ஜெ,

இமைக்கணம் நாவல் வரிசைக்கு ஒரு வகையான ஒழுங்கு இருப்பதை இப்போது கண்டேன். கர்ணன், பீஷ்மர், சிகண்டி அனைவருக்குமே முதலில்  ‘மகத்தான மனக்குழப்பம்’ [உங்கள் கீதை உரையிலிருந்து] ஏற்படுகிறது. அவர்கள் அதை கொந்தளிப்பாக முன்வைக்கிறார்கள். அதைத்தான் கீதையில் அர்ஜுனன்கூட செய்கிறான். கிருஷ்ணர் எப்போதும் சிறிய கேலியுடன் தொடங்குகிறார். அவர்கள் அவர் சொல்வதை ஏற்பதில்லை. தத்துவம் சொல்லி என்னை ஏமாற்றாதே என்கிறார்கள். அவர் ஓர் அனுபவத்தை அளிக்கிறார். அவர்கள் உணர்கிறார்கள். தங்கள் கேள்வியை அதன்பிறகே தத்துவார்த்தமாக எழுப்பிக்கொள்கிறார்கள். அதை அவர் விளக்கி இன்னொரு அனுபவத்தை அளிக்கிறார். பதிலை உணர்கிறார்கள். அல்லது ஒரு பொய்யான முடிவை நோக்கிச் செல்கிறார்கள். இன்னொரு அடி விழுகிறது. கீதாமுகூர்த்தம் நிகழ்கிறது. இமைக்கணம் என்பது கீதா முகூர்த்தம் நிகழும் சந்தர்ப்பம்தான் என நினைக்கிறேன்

அருண்