ஜெ
அறிவு, அறிதல்
பற்றி இத்தனை விரிவான ஒரு விவாதத்தை வாசித்ததில்லை.அறிவுக்கு ஆணவம் பெரிய தடை என முதலில்
தோன்றலாம். ஆனால் அறியாமைமேல் அருவருப்பு கொள்ளச்செய்து அறிவைநோக்கிச் செலுத்தும் ஆணவம்
ஆரம்பத்தில் அறிவுக்கு மிகப்பெரிய கவசம் என்கிறது இமைக்கணம். “ அறியாமையே அறிவுக்கு எல்லைவகுத்து வடிவளிக்கிறது. அறிவெனும் ஒளிக்கு பொருள் அளிக்கும் இருள் அது. அறியவிழைவோர் அனைவருமே ஆணவத்தாலானவர்கள். அறிவு ஆணவமென தன்னில் ஒரு பகுதியை உருமாற்றிக்கொள்கிறது. தலைப்பிரட்டையின் வால். காலும் கையும் செதிலும் சிறகுமாகி அதை உந்திச்செலுத்தி உயிரசைவுகொள்ளச் செய்வது”
ஒவ்வொரு கூற்றுடனும் வரும் உவமையே அதை இலக்கியமாக்குகிறது. தலைப்பிரட்டை ஒரு உருண்டை.
அதை அசையவைப்பது அதன் வால். ஆணவம் அறிவெனும் தலைப்பிரட்டையின் வால்
மகேந்திரன்