அன்புள்ள ஜெ
லஹிமாதேவியின் ஸ்மிருதி நூல் ஒருபக்கம். மறுபக்கம் பராசரரின் தேவிஸ்தவம். இரண்டும்
இரண்டு எல்லை. இரண்டுக்கும் நடுவேதான் விதுரரின் மனம் ஆடிக்கொண்டிருக்கிறது. ஒன்று
கொடூரமான நீதி நூல். இன்னொன்றும் கவிதையின் அழகு கொண்டது. சைக்கெடெலிக்கான ஒரு பக்திநூல்.
இவ்விரண்டாகவும் விதுரர் தன்னைப்பிரித்துக்கொண்டிருந்தார் என நினைக்கிறேன். இரண்டு
நூலையும் அவர் மனம் எப்படியெல்லாம் கண்டடைகிறது என்று பார்ப்பது அவரைப்புரிந்துகொள்ள
உதவும். பழைய அத்தியாயங்கள் முழுக்க அது வந்தபடியே இருக்கிறது. நான்யாஸ்தி சனாதனம்
என்ற தேவிபாகவத வசனமே அவருடைய ஆப்தமந்திரமாக இருக்கிறது
ஸ்ரீனிவாசன்