Wednesday, April 18, 2018

விதுரர்



அன்புள்ள ஜெ

இன்று ஒரே அத்தியாயத்தில் (இமைக்கும் 21)
விதுரரின் பாத்திரப் படைப்பை வெறுக்கச் செய்து விட்டீர்கள்... இது சாதாரண நிலைக்குலைவு அல்ல tantrum என்பதே பொருத்தமாக இருக்கும்...//அரசன் குற்றம்சாட்டினால் நெறிகளை நோக்கவேண்டியதில்லை. ஒவ்வாதவன் யாராயினும் அகற்றலாம் என்கின்றது நெறிநூல்” என்று விதுரர் கூவினார். “லகிமாதேவியின் நூல்” என்றான் சுபோத்யன். “ஆம், அதுவே என் நெறிநூல்// இந்த இடம் திடீர் சிரிப்பை வரவழைத்தது... கோப வெறி எழும் சூழலில்  அரசதிகாரமும் உள்ளவர்கள் அறிஞர்களாகவும் அறியப்படுபவர்கள் தங்களுக்கு வசதியான ஒரு நெறிநூலை துணைக்கழைத்துக் கொள்கிறார்கள் தங்கள் செயலை நியாயப்படுத்தும் பொருட்டு.... சில வருடங்களாக வெண்முரசுடனே வாழ்ந்து வருவதால் அந்த பாத்திரங்களின் நிலைகுலைவு என்னையும் சற்றே உடைத்துப் பார்க்கிறது... 



சிவக்குமார்

சென்னை