ஜெ
இமைக்கணம் என்பது காலமின்மை. எதிர்காலமும் அதற்குள் அடங்கும். நாவல் மிகச்சரியாக
முதற்கனலில் வியாசர் வந்து பாரதக்கதை சொல்லி தட்சனை விடுவிக்கும் இடத்திற்கு டைவ் அடித்துவிட்டது.
ஒருதுளி நஞ்சு மிஞ்சியிருக்கவேண்டும் என்பதுதான் வியாசர் அங்கே சொல்வது. அது அவருடைய
தந்தை பராசரருக்கு அவருடைய தந்தை வசிட்டர் சொன்னது. அரக்கர் குலம் முழுமையாக அழியக்கூடாது
என்று. இங்கே நாகர்குலம் அழியக்கூடாது என்கிறார். ஒரு துளி மிச்சமிருக்கவேண்டும், ஒரு
சொல் எஞ்சியிருக்கவேண்டும் என்று அவர் சொல்வது இதைத்தான்
அருண்