ஜெ
வெண்முரசின் இமைக்கணம் இதுவரை அறிதலைப்பற்றிச் சொன்ன அனைத்தையும் அறிதலில் இருநிலை
இல்லை என்னும் வரியாகச் சுருக்கிக் கொள்ளலாம். நாம் மேலைநாட்டு எபிஸ்டமாலஜியில் இருந்து
கற்றுக்கொண்டிருக்கும் அனைத்துக்கும் எதிரானது அது. அறிதல் என்பது உடல்வளர்வதுபோல அறியாமல்
நிகழ்ந்தால் மட்டுமே அது அறிவு. நாம் அறிந்தால் அது வெறும் கொண்டாட்டமாக ஆகிவிடும்.
இன்பதுன்பங்களை அளித்து நம்மை அதிலேயே கட்டிப்போடும். ஆணவமாக ஆகி மேலே அறியமுடியாமல்
தேங்கச்செய்யும்.
மிக விசித்திரமானதாக முதலில் தோன்றியது. ஆனால் நான் ஒரு டெக்னிஷியன்.
நான் இன்று அடைந்திருக்கும் அறிவைக்கொண்டே இதைப்புரிந்துகொள்கிறேன். என் அறிவை நான்
எப்படி அறிந்தேன் என்பதே எனக்குத்தெரியாது. நான் என்னை அறியாமலேயே கற்றுக்கொண்டே இருந்திருக்கிறேன்.
என்னை அறியாமலேயே என் உள்ளம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. இங்கே நின்று என் சிறுவயதைப்பார்க்கையில்தான்
எவ்வளவு மாறியிருக்கிறேன் என்பதே தெரிகிறது.
இதுதான் உண்மையான அறிவு. தியானம் மூலம்
சாதகம் மூலம் அடையும் அறிவும் இப்படித்தான் இருக்கும் என நினைக்கிரேன் இப்படி இயல்பாக வந்தமையாத அறிவெல்லாம் ஊளைச்சதைதான். வெறும் சுமை. அகங்காரம்.
ராமச்சந்திரன்