இனிய ஜெயம்
// எதிரே அமர்ந்திருந்த இளைய யாதவர் “கேட்டீர்களா?” என்றார். “எதை?” என்று சிகண்டி கேட்டார். “அன்னையின் விருப்பம் என்ன என்று?” என்றார் இளைய யாதவர். “கேட்கவேண்டியதே இல்லை. யாதவரே, அது ஆணும் பெண்ணும் ஆடும் கூத்தின் ஒரு தருணம். பெண்ணை ஆண் கொல்கிறான். ஆணை பெண் உண்கிறாள். அவன் உடலின் பகுதியென்றாகிறாள். அவள் வயிற்றில் அவன் கருவாகிறான்” என்றார் சிகண்டி. மலர்ந்த முகத்துடன் “நான் செய்வதென்ன என்று தெளிந்தேன்” என்று சொல்லி கைகளை விரித்தார்.// வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-16
மிக அழகிய அத்யாயம் . ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கும் சிகண்டி அறியும் மெய்மைக் கணம் .
ஆணாகவோ பெண்ணாகவோ இல்லாத சிகண்டி மட்டுமே செய்ய முடிந்த செயல் பீஷ்ம வதம் என சிகண்டி ஐயமற அறியும் கணம் .
கடலூர் சீனு