ஜெ
முடிவின்மை என்று சாதாரணமாக பயன்படுத்துகிறோம். குறிப்பாக சயன்ஸ் வந்தபின்னாடி
முடிவின்மை என்பது ஒரு சொல் போலவே ஆகிவிட்டது. ஆனால் முடிவின்மை கற்பனைசெய்வதற்கு அவ்வளவு
பயங்கரமானது என்று காட்டியது இந்த அத்தியாயம். முடிவின்மையில் எல்லாமே முடிவின்மைதான்.
இந்த எண்ணம் எனக்கு எழுந்ததே இல்லை. நான் கணக்கு பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவன்.
முடிவின்மையில் பிரம்மம் மட்டுமல்ல காலம் வெளி எல்லாமே முடிவில்லாதது. ஆகவே சுகனும்
வியாசனும் எல்லாமே முடிவில்லாததுதான். வியாசன் காணும் விஸ்வரூபக்காட்சி இது
ஈஸ்வரமூர்த்தி