ஜெ
அறிதல் என்னும்
செயலில் உள்ள ஒவ்வொரு தடையாக இமைக்கணம் விளக்கிக்கொண்டுசெல்கிறது என்று நினைக்கிறேன்.அறிதலில்
உள்ள பெரும்தடை அறிவை நம் விருப்பப் படி புனைந்துகொள்வதுதான். அந்தப்புனைவை ஏற்பவர்களிடம்
மட்டுமே நாம் உரையாடுகிறோம். அதை அவர் கொஞ்சம் மறுத்தாலும் அகங்காரம் சீண்டப்பட்டு
கோபம் அடைகிறோம். நம் அகங்காரத்திற்கேற்ப உருவாக்கப்பட்ட புனைவுகளை உண்மையென்று நம்பி
அதற்குள் வாழ்கிறோம்.
இந்த அத்தியாயங்களில்
வரும் உவமைகள்தான் பொட்டிலறைந்ததுபோல இதைச் சொல்கின்றன.
“புழுக்கள் தங்கள் உடல்வடிவிலேயே அறைகட்டி குடியிருக்கின்றன. அவ்வறையையே அவற்றின் உடல் உகந்ததென்று உணரும்”.
இந்தக் காரணத்தால்தான் மனிதர்களால் இன்னொருவரை அறியவே முடிவதில்லை.
என்னை புரிந்துகொள்ளுங்கள் என்று கூச்சலிடுகிறார்கள். ஆனால் என் புனைவை ஏற்றுக்கொள்ளுங்கள்
என்பதுதான் அதற்குரிய உண்மையான அர்த்தம். நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு இது தெரியும்.
ஒவ்வொருவரும் ஒரு கதை என்று என் பாஸ் முன்பு சொல்வார். ஆயிரம் கதைகள் கொண்டது நம் ஆபீஸ்
என்பார். இந்தப்பகுதிகளின் வழியாக மெய்யாகவே ஒன்றை அறிவது எவ்வளவு கடினமானது என்பதைத்தான்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
ஜெயராமன்