ஜெ,
வெண்முரசில் epistemology
ontology வரிசையில் அடுத்துவரவிருப்பது ethics தான் என்பதை ஊகித்திருந்தேன். அப்படியென்றால்
குந்தி பாஞ்சாலி தருமர் மூவரில் ஒருவரே வருவார் என நினைத்தேன். தருமர் வந்ததில் நிறைவு.
அவர் சந்திக்கும் அந்த தார்மீகப்பிரச்சினையும் நுட்பமானது. தார்மீகன் சந்திக்கும் மிகப்பெரிய
பிரச்சினை அவனுக்குள் இருந்தே வரும் என்று சிவானந்தர் ஓர் உரையிலே சொல்கிறார். அவனுடைய
அவநம்பிக்கையோ இந்திரிய ஈர்ப்புகளோ அதற்கு தடையாக ஆகும். ஆகவேதான் தார்மிகர்கள் இறுக்கமான
மனிதர்களாக ஆகிவிடுகிறார்கள். தார்மீகம் ஒருவகையான ஆயுதம்போல மனிதர்களை மாற்றிவிடுகிறது.
தார்மீகன் கூடவே பக்தியைக் கைக்கொண்டு பூரணார்பணம் செய்யவில்லை என்றால் எதையுமே அடையமுடியாது.
வெறும் அகங்காரியாக ஆகிவிடுவான்
கிருஷ்ணமூர்த்தி