பிறப்பின் வாழ்வின் இறப்பின் பொருளை ஒவ்வொரு கணத்திலும் உணராத ஒருவர் எப்போதும் உணரப்போவதில்லை.
தன் உடலில் ககனத்தை உணராதவர் வானில் எதையும் காண்பதில்லை.
முழைத்து முனைகொண்டு எவரும் அறிவதில்லை.
இயல்தலும் இசைதலுமே அறிவின் நெறி.
ஒரே சொற்றொடர் போலச் செல்லும்
இந்த பத்தி கீதையைத் தொட்டு இன்றைய வாழ்க்கையை நோக்கி வருகிறது. அறிவது ஏதோ கடைசியில்
அல்ல. ஒவ்வொரு கணமும்தான். பிரபஞ்சம் வேறெங்கோ அல்ல. உடலே பிரபஞ்சம்தான். பொதுவிலிருந்து
பிரிந்து எதையும் அறியமுடியாது. இயல்பாக கரைந்திருந்து தான் அறியமுடியும். எல்லா கணமும்
எல்லா தருணமும் இயலபாக அதில் இருப்பதே அத்வைதம். அத்வைதமென்பது பிரம்மமும் ஜீவாத்மாவும்
மட்டும் அல்ல. இயற்கையும் மனிதனும். காலமும்
மனிதனும் இரண்டில்லாமல் ஆவதும்தான். விவேகானந்தர் முதல் பலர் இதை எழுதியிருக்கிறார்கள்
மனோகர்