அன்புநிறை ஜெ,
வியாசன் பெருவெளியின் முடிவிலியிலிருந்து மீண்டு தன் குடிலுக்கு வந்து, யமன் தன் இறப்புத்தொழில் நிறுத்தியதும் நிகழும் பெருந்துயரை, பிரபாவன் தியானிகன் கதையை எழுதத் தொடங்குவது காலம் ஒரு சுழியென நின்றிருக்கும் நைமிஷாரண்யத்தின் அழகு.
யமன் செய்தொழில் நிறுத்தக்காரணமாகும் அறம் குறித்து உருவான அமைதியின்மையைப் போக்க ஒவ்வொரு உருவாக எடுத்து இளைய யாதவரை அணுகுகிறார். வியாச உருக்கொண்டு யமன் பெறும் அறிதலை வியாசன் எழுதும் கதையில் வரும் யமன் கொள்ளும் வினாக்கள் மற்றுமொரு வியாசனை நிகழ்த்தக் கூடும். எண்ணற்ற வியாசர்கள், அவர்களிலெழும் எண்ணற்ற சுகர்கள்.
மனோஹரம் என்னும் வட்டவடிவமான குளிர்ச்சுனையின் உள்ளே வாசகனும் நுழைந்து விட்ட அனுபவம்.
மிக்க அன்புடன்,
சுபா