ஜெ
முதற்கனலில் அம்பை
அறிமுகமாகும்போதுதான் தாட்சாயணியின் கதை சொல்லப்படுகிறது. சிவன் அன்னையை எரிக்க அன்னை
எரிபுகுந்து மறைந்தது அங்கே சொல்லப்பட்டு அம்பை விஸ்வேஸ்வரன் கோயிலுக்குப்போகும் காட்சி
தொடங்குகிறது. நீண்ட இடைவேளைக்குப்பின்
சிகண்டி காணும் காட்சியில் அம்பையும் பீஷ்மரும் சிவபர்வதியாக தெரிகிறார்கள். சிவன்
பார்வதியை எரித்ததும் அம்பை எரிபுகுந்ததும் சிவன் காத்திருந்ததும் சொல்லப்பட்டு அவர்களின்
இனிமை அதன்பின்னர் தொடங்குவதாக வருகிறது. இந்த நுணுக்கமான அர்த்தத்தை தனியாக யோசிக்கவேண்டும்.
ஆண்பெண் உறவை சிவபார்வதி ஆடலாக சிகண்டி இங்கே காண்கிறான். இந்த அனாலஜி ஆரம்பம் முதலே
இருந்துகொண்டிருக்கிறது
மகாதேவன்
https://www.jeyamohan.in/44027#.WsuK4S5ubIU