ஜெ
அறிதலில் உள்ள நான்கு சிக்கல்களை விதுரருக்கு கிருஷ்ணன் சொல்கிறான்
நான் அறிகிறேன் என நினைப்பது. இது ஆணவம். அறிவை நம்மை நோக்கிச் சுருக்கிவிடும்
ஏற்கனவே அறிந்ததை வைத்து மேலும் அறிவது. இது அறிவை வேலிகட்டிவிடும்
அறிவதற்கு ஒரு மையச்சரடை கண்டுபிடிக்க முயல்வது. இது அறிவை கட்டமைப்பாக மாற்றிவிடும்
அறிவுக்கு ஓர் இலக்கு இருக்கிறது என நினைப்பது. இது அறிவை ஒரு வகையில் தொகுக்கச்செய்யும்
அறிவில் இயல்பாக இருப்பதே சிறந்த அறிதல். உடல் வளர்வதுபோல அறியாமல் அறிவும்
வளர்வதே அறிவு நாம் ஆக மாறுவது.
மகாதேவன்