இனிய ஜெயம்
காயிலே புள்ளிப்பதென்ன கண்ண பெருமானே கனியிலே இனிப்பதென்ன கண்ணபெருமானே எனும் பாரதியின் அத்வைத வரிகளை சிகண்டி கண்ண பெருமான் வசமே வினாவாக கேட்பதாக வெண் முரசு சித்தரிப்பது பேரழகு .
நமது அருகர்களின் பாதை பயணத்தில் நாம் கண்ட வித விதமான பூவராகவன் எழில் கோலங்கள் வெண் முரசில் போருக்குப் பிறகான சூழல் ஏதேனும் ஒன்றில் விஸ்வரூபம் கொண்டு தொழில்படும் என எண்ணி இருந்தேன் .இன்ப அதிர்ச்சி . அது எங்கே வர வேண்டுமோ அங்கே கச்சிதமாக அமைந்து விட்டது .
இரு பால் கொண்டதினால் மட்டுமே சிகண்டி அறிய வரும் அப்பன் அம்மையின் ஆடல் . தான் கொண்ட இலக்கில் அவன் ஆணாக நின்றாலும் ,பெண்ணாக நின்றாலும் அந்த இலக்கை அவனால் அடைய இயலாது . ஆகவே கொண்ட உடல் என்பதே சிகண்டி இலக்கை அடையும் வகைமையை செய்யும் முதல் அலகு .
பீஷ்மரை கொல்ல இயன்ற ஒரே வித்தையை அவருக்கு கற்று தந்தவர் பீஷ்மரே என அறியும் கணமே சிகண்டி உடையும் கணம் . பீஷ்மர் நீதான அம்பையின் காதல் அவரை ஐயம் கொண்டவர் என ஆக்குகிறது .
அந்த ஐயம் நீங்கும் கணம் அவரே அறியாத மாபெரும் தன்மையை ஆணவம் அல்லது அறியாமையில் விழுகிறார் . அந்த அறியாமை சேற்றில் இருந்து அவரை விடுவிக்கிறார் பூவராகவன் . பல நூறு அம்மை அப்பன் கூடி நிகழ்த்தும் ஆட்டம் நிகழும் புவியை வராகன் தனது தந்தங்களின் நுனியில் தாங்கி சுழல செய்து கொண்டு இருக்கிறார் .
கனிந்து நிற்கும் அம்பை சொல்லும் . கனிக்குள் விரவி நிற்கும் புளிப்பேனே ஊர்வரையின் சொல்லும் அவரை முற்றிலும் மீட்கிறது .
பீஷ்மர் ,அம்பை ,ஊர்வரை என சிகண்டியை சஞ்சலம் கொள்ள வைத்த அனைவரும் என புடவி நெறி கொண்டு பழுதற்ற ஐயமற கட்டப்பட்டிருக்கிறார்கள் என அவர்களின் சொல் கொண்டே சிகண்டி அறிகிறார் .
இனி வஞ்சத்துக்கும் அன்புக்கும் அப்பால் உள்ள அறத்தின்,இப் புடவி சமைக்கும் பெரு நெறி ஒன்றின் கருவி சிகண்டி .
சீனு