Monday, April 9, 2018

அறிவு



அறியப்படாமையும் அறியவொண்ணாமையும் அறிவுகடந்தமையும் அறிவே. அறிபொருள் அறிவோன் அறிவு எனும் மும்மையழிந்த நிலையில் அது நிலைகொள்கிறது.

வேதாந்த விவாதங்களில் வெவ்வேறு வகைகளில் விளக்கப்படும் ஒரு கருத்து இது. அறியப்படுவன எல்லாமே அறிவின் வடிவில் இருப்பதனால் பிரம்மமும் ஓர் அறிவின் வடிவிலேயே அறியப்படமுடியும் என்பது

அந்த அறிவை அடைவதற்குரியது செயல். ஆனால் செயல் மேலும் செயல் என்று வளர்ந்து அறியமுடியாததாக ஆகும்.  ஆகவே இவ்வாறு சொல்லப்படுகிறது

செயலினூடாக செயலை கைவிடுக! செயல்நிறைவென்பது செயல்கடத்தலென்றாகுக! செயலில் எழும் அறிவும் செயல்மிச்சமே. எஞ்சாச்செயலே வீடுபேறளிக்கும் என்று அறிக!

சாரங்கன்