அனைத்து தொல்விசைகளும் அழகென்றும் அறமென்றும் மெய்மையென்றும் உருமாற்றத் தக்கவையே
ஜெ
சட் சட்டென்று மின்னி மறையும் வரிகளில்தான் பெரும்படைப்புகள் உயிர்கொள்கின்றன. வானத்தைப்பார்ப்பதுபோல. நாம் அதன் விரிவைத்தான் பார்க்கிறோம். ஆனால் மின்னும் நட்சத்திரங்கள் நம் மனதில் நின்றிருக்கின்றன. இந்த வரியை மீண்டும் படித்துவிட்டு அபப்டியே வைத்துவிட்டு கொஞ்சநேரம் யோசித்துக்கொண்டிருந்தேன். ப்ரிமிட்டிவ் ஃபோர்ஸஸ் எல்லாமே அழகாக அறமாக மாறமுடிபவை. சொல்லப்போனால் காமம்தான் கலை. பழிவாங்கும் வெறிதான் அறம்.
ராமச்சந்திரன்