ஜெ
செயலை தவம் எனச்
செய்பவர் பீஷ்மர். ஆனால் எப்போதும் ஒரு அம்பு தவறிவிடுகிறது. அம்பை அப்படிப்பட்ட ஓர்
அம்பு. அந்தப்பிழைகள் ஒன்றாகச்சேர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கின்றன. இதுதான் அவருடைய
வாழ்க்கை. அதில் சோர்ந்துபோய் அப்படியே விட்டுவிட்டு ஓடுவதைப்பற்றி யோசிக்கிறார். அதற்குத்தான்
கர்மயோகம் சொல்லப்படுகிறது. கர்ணன் சொல்வது எனக்கு என்ன பயன், செய்வது சரியா என்று.
இவர் சொல்வது மனிதர்கள் செயலாற்றுவது சரியா, தேவைதானா என்பது. அதற்கு சாங்கிய யோகம்.
இதற்கு கர்மயோகம். இப்போது இந்நாவலின் கட்டமைப்பே பிடிகிடைக்கிறது
சரவணக்குமார்