Thursday, April 19, 2018

வியாசனும் கிருஷ்ணனும்

 

அன்புள்ள ஜெ

வியாசனுக்கும் கிருஷ்ணனுக்குமான உறவு ஓர் அற்புதமான கற்பனை. வியாசன் ஆசிரியன். கிருஷ்ணன் கதாபாத்திரம். தன் கதாபாத்திரத்தைப்பார்த்து ஆசிரியன் பரவசம் அடைகிறான். புனைந்து புனைந்து மட்டுமே அரியப்படவேண்டியவன் அவன். அவனை எவ்வாறெல்லாம் புனைந்துகொண்டேன் என்று சொல்கிறான்  கேசாதிபாதம் பாதாதிகேசம் பார்க்கிறான்

ஆனால் அவனை ஆசிரியன் முழுசாகப்புரிந்துகொள்ளவில்லை. ஆசிரியனை கதாபாத்திரம் ஓவர்டேக் பண்ணிவிடுகிறது. அதைக்கண்டு ஆசிரியன் கதறுகிறான்.

என்.ஆர்.சம்பத்