அன்புநிறை ஜெ,
எல்லா நாளும் விடிவதும் முடிவதும் உங்கள் எழுத்துக்களோடுதான் எனினும் இன்றைய நாள் மிக இனிது. அவ்வண்ணமே உங்களுக்கும் இந்தப் பிறந்த தினம் இனிமையொடு கழிந்திருக்கும் என நம்புகிறேன். மேலும் பல்லாண்டுகள் மலர்காடென எங்களுக்குள் விதைத்து கனிந்தெழுந்து எங்களை வாழ்த்துங்கள்.
எழுதுவதனைத்தும் தன்னை அறிவதற்கே; எழுதி எழுதித் தன்னையும் தன் வழியையும் இலக்கையும் கண்டடையும் பொருட்டே என்று கூறியிருக்கிறீர்கள்.
நேற்றைய இமைக்கணம் (https://venmurasu.in/2018/04/ 21/நூல்-பதினேழு-இமைக்கணம்-28/) தங்களை முழுமையாகத் தொகுத்துக் கொள்ளும் வகையெனத் தோன்றியது.
//ஊழ்கம் உனக்குரியதல்ல. சொல் சுருங்குவது ஊழ்கம். சொல் விரிவது காவியம். உன் மனம் நுரைத்தெழுகிறது. நீ கவிஞன்” என்றார்//
//உனக்குரிய எதையும் எவரிடமும் நீ கோரவேண்டியதில்லை. சொல்லிப் பெருக்கும் உனக்கு ஊழ்கம் ஒருபோதும் அமையாது. சொல்லை முழுதெழவைக்கும் உனக்கு ஊழ்கம் தேவையுமில்லை”//
குரு தந்தையென நின்று உங்களுக்கு உரைத்தது அல்லவா இது.
மிக்க அன்புடன்,
சுபா